பாடசாலை வரலாறு...
எமது அக்கரைபற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையானது. கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் அக்கரைபற்று மாநகரத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. அரச முஸ்லிம் பாடசாலை ஒன்றின் தேவையை உணர்ந்து சமுகப்பணிகளில் ஈடுபட்டிருந்த ஹிதாயத்துல் இஸ்லாம் அமைப்பின் உறுப்பினர்களே இக்கல்லூரி உருவாக காரண கர்த்தாவாக அமைந்தவர்களாவர்.
இவர்களின் முயற்சியின் பலனாக மதிப்பு மிக்க கல்விமான்களாகிய ஜனாப் MP.முகைதீன் DRO, திரு.விவேகானந்த ராஜா DMO, திரு. ஞானசூரியம் BTC ஆகியோரின் அனுசரணையோடு, திருமானாகப்போடி (அக்கிராசனர்), மர்ஹூம்களான ஜனாப் முஹம்மது தம்பி, ஜனாப் AM.முத்துமரீலெப்பை, ஜனாப் இஸ்மாயில் லெப்பை (எலவை குட்டி பரிசாரி), ஜனாப் முஹம்மது இஸ்மாயில் ஆலிம், ஜனாப் முஹம்மது இப்றாலெப்பை, ஜனாப் ஆமு. உமர்லெப்பை, ஜனாப் MS.முஸ்தபா உடையார், ஜனாப் MHM.முகையதீன் (சக்கரதம்பி விதானை), ஜனாப் முஹம்மது தம்பி வட்டை விதானை ஆகியோரால் 04.01.1945 அன்று அக்கரைப்பற்று ஆண்கள் பாடசாலை என்ற பெயரில் இக்கலையகம் உருவாக்கப்பட்டது. இது அக்கரைப்பற்றில் உருவான 2முஸ்லிம் பாடசாலையாகும். கால மாற்றத்தால் இதன் பெயர் அக்கரைப்பற்று அரசினர் முஸ்லிம் ஆண்கள் வித்தியாலம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதல் அதிபர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஜனாப் ULMI இஸ்மாயில் ஆவார். முதல் மாணவன்- ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் MI.கமால்தீன் ஆவார். இதனைத் தொடர்ந்து 01.09.1946 ல் இப்பாடசாலை நிர்வாகம் நாடளாவிய ரீதியில் நன்கறியப்பட்ட மர்ஹூம் புலவர் மணி ஆ.ஷரிபுத்தீன் (மருதமுனை) அவர்களின் கைக்கு மாறியது இவருடைய காலத்தில் இப்பாடசாலையில் SSC வகுப்பு வைக்கப்பட்டு அதிகமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்களில் பலர் இன்று புகழ் பூத்த அதிபர்களாகவும் கல்விமான்களாகவும் எழுத்தாளர்களாகவும் திகழ்ந்து ஓய்வு பெற்றுள்ளனர்.
குறிப்பாக மர்ஹூம்களான ஜனாப் மீராலெப்பை அதிபர் (சலாவுதீன்), ஜனாப் ARM.கியாதுதீன் (சலீம் மாஸ்டர்). ஜனாப் அஸ்.அப்துஸ் ஸமது (எழுத்தாளர்), ஜனாப் ஆ.ஜமால்தீன் (அதிபர்), ஜனாப் MI.அலாவுதீன் அதிபர் (பிஸ்கால் உடையாரின் மகன்), ஜனாப் MA ஆப்தீன் ஆலிம், ஜனாப் MA.அப்துல் காதர், ஜனாப் ARM.சஹாப்தீன் ஆலிம், ஜனாப் AB உதுமாலெப்பை டெய்லர், ஜனாப் ஹனீபா மெனேஜர். ஜனாப் ஸெய்யது அஹமத் டெய்லர், ஜனாப் AM. இப்றாலெப்பை (மிருக வைத்தியசாலை), ஜனாப் MI.முஹம்மது மீரா சாஹிபு (தம்பி போடியார் டில்கா), ஜனாப் அலித்தம்பி வட்ட விதானை போன்றோரைக் குறிப்பிடலாம். இப்பாடசாலையானது, அயல் பாடசாலையொன்றைத் தரமுயர்த்த வேண்டும் என்பதற்காக விட்டுக் கொடுப்புடன், மீண்டும் ஆரம்பப் பாடசாலையாக தன்னை மட்டுப்படுத்திக் கொண்டு நீண்டகாலம் பயணித்தது.
முன்னாள் அதிபர்களின் விபரம்,
- ஜனாப் ULM.இஸ்மாயில் (முதல் அதிபர்)
- ஜனாப் மர்ஹூம் AM.சரிபதீன்
- திரு. நல்லலிங்கம்
- மர்ஹூம் JM.பதுர்தீன் மௌலானா
- மர்ஹூம் M.முஹம்மது தம்பி
- ஜனாப் MPM.மக்கீன்
- மர்ஹூம் MSM.ஆதம்லெப்பை
- மர்ஹூம் S.ஜெய்னுலாப்தீன்
- ஜனாப் மர்ஹூம் ஹீ
- மரஹூம் YM ஜமால்தீன்
- ஜனாப் MPM.மக்கின்
12. மர்ஹூம் SM.ஜமால்தீன்
- மர்ஹூம் PS.மீரா
- மர்ஹூம் SM.ஜமால்தீன்
- அல்ஹாஜ் A.அஹமது முகைதீன்
- ஜனாப் MS.அபுல் ஹஸன்
- ஜனாப் MU.ஹாரூன்
மேலும் இடைநிலைப் பாடசாலையாக தரமுயர்தப்படுவதற்கு சகல தகைமைகள் இருந்தும், சில தடைகள் ஏற்பட்ட போது மர்ஹூம் PS.மீரா அதிபரின் தவறாத விடா முயற்சியினால் நீதி மன்றம் வரை சென்று, தரம் 09 வரையுள்ள இடைநிலைப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டு இன்று "டைப்" | பாடசாலையாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றது. அந்த உயர்விற்கு எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடம் கொடாமல் பெற்றோர்களையும் மற்றவர்களையும் கச்சிதமாக வழிநடாத்தி வெற்றியைப் பெற்றுக் கொடுத்த பிதாமகன் மர்ஹூம் PS.மீரா அதிபர் ஆவார். வீதியோர மதில்கள் தற்காலிக கட்டிடம் என்பன இவரால் அமைக்கப்பட்டதாகும்.
எமது ஆலர்கள் வித்தியாலயம் தேசிய ரீதியில் புகழ்பூத்து நிற்பதற்கு வித்திட்டவர்களில் மிக முக்கியமானவராக மதிப்பிற்குரிய அதிபர் ஜனாப் MPM.மக்கீன் (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களைக் குறிப்பிடலாம். இவரதுகாலத்தில் இப் பாடசாலை விறுவிறுப்பாக இயங்கியதோடு மாணவர்களின் அறிவு, திறன் மனப்பாங்கு வளர்ச்சிக்கு பலமான அத்திவாரமிட்டுள்ளார். சூழலை சோலையாக்கினார். நாள் பார்த்து அரிச்சுவடி ஆரம்பிக்கும் வித்தியாரம்ப முறையை இவரே ஆரம்பித்தார். பரிசளிப்பு விழாக்கள், பொருட்காட்சி, சுற்றுலாக்கள் போன்றவற்றோடு புலஸமப் பரிசில் பரீட்சை வகுப்புக்களையும் திறம்பட நடாத்தி வெற்றியும் கண்டார்.
இதன் கவர்ச்சியினால் வெளியூர்களிலிருந்து பல மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றுள்ளார்கள் மேலும் இவரைப் போன்றே புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களை
நடாத்தியவர் மர்ஹூம் S.முஸ்தபா லெப்பை ஆசிரியர் அவர்கள் ஆவார். இவர்களின் வழிகாட்டயில் பயின்ற செல்வன் அஹ்மத் றிப்த் என்ற மாணவன் 1994 ல் நடைபெற்ற புைைமப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 190 புள்ளிகளைப் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றமை இப் பாடசாலை ஈட்டிய பெரும் சாதனையாகும். இதே போன்று மர்ஹூம் உலா IM அடிக்க ஆசிரியர் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட AM.அஹமட் சபி என்ற மாணவன். I9BA இல் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்று ஜப்பான் நாட்டிற்கு செல்ல தெரிவாகிய ஒரே ஒரு முஸ்லிம் மாணவன் என்பதும் இங்கு குறிப்பிடதக்கதொன்றாகும். இக் கலையகத்தில் புலமைப்பரிசில் பரீட்சை வருப்புக்களை சிறப்பாக நடாத்தி வெற்றி கண்டவர்கள் வரிசையில் MPM.மக்கீன் அதிபர், மர்ஹூம் S.முஸ்தபா லெப்பை ஆசிரியர், மர்ஹூம் IM.அபூபக்கர் ஆசிரியர், மர்ஹும் ALஆதம்லெப்பை அதிபர். ஜனாப் MA.நிலாமுத்தீன் ஆசிரியர். ஜனாப் MI.சாபி ஆசிரியர், ஜனாப் SLM. இஸ்மாயீல் ஓய்வுபெற்ற ஆசிரியர், ஜனாப் ALA ஜெலில் ஆசிரியர். ஜனாப் ULM.ஹாஸிம் ஆகியோர் அங்குவர்.
இப் பாடசாலை தன் இருப்பை (நிலயத்தை) அருகிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு பல நடலைகள் விட்டுக்கொடுத்து இடம்பெயரத்திருக்கின்றது. ஈற்றில் 1982 ஆம் வருடம் இன்று இருக்கும் இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அடுத்து அதிபராகக் கடமையேற்ற மஜும் SM ஜமால்தீன் அவர்கள் எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். முன்னாள் சம்மாந்துறை பாரளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் MA அப்துல் மஜீந் அவர்களைக் கொண்டு 100 அடி நீளமான வகுப்பறைக் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து ஜனாப் Aஅஹமது முஹைதீன் ஆசிரியர் பதில் அதிபராக கடமையேற்றார். அதிபர் காரியாலயம் சுற்று மதில், குழாய்க் கிணறு போன்றன அமைக்கப்பட்டதுடன், தரம் - 1 மாணவர்களுக்கு தனியான வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு அதில் சுவர் ஓவியங்களும் வரையப்பட்டன. இவருடைய காலத்தில் இப் பாடசாலை 50 ஆண்டு நிறைவை ஒட்டி, தனது பொன் விழாவை சிறப்பாக கொண்டாடியது. இவ் விழாவில் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் MHM.அஷ்ரஃப் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இவரைத் தொடர்ந்து ஜனாப் MS.அபுல் ஹசன் அவர்கள், இப் பாடசாலையின் அதிபர் பதவியைப்
பொறுப்பேற்று சில மாதங்கள் மட்டும் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றார். அடுத்து
எமது கலையகத்தை கையகப்படுத்தியவர் ஜனாப் MU ஹாறூன் அதிபர் அவர்களாவார்.
இவரது காலத்தில் பாடசாலையானது, கல்வி மேம்பாட்டோடு மாணவர் ஒழுக்க
விழுமியங்களுடனும் மேலோங்கிக் காணப்பட்டதுடன், புலமைப் பரிசில் பரீட்சைப்
பெறுபேறுகளும் மிக உயர்ந்த நிலையில் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைப்
பயிற்றுவிப்பதற்காக ஜனாப் SLM.இஸ்மாயில், ஜனாப் ALஅப்துல் ஜெலீல், ஜனாப் ULM ஹாஸிம் ஆகிய 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவ் ஆசிரியர்களின்
அயராத உழைப்பில் 1999 ல் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 57 மாணவர்களில் 28 மாணவர்கள் சித்தியடைந்து 49.2% பெறுபேற்றை பெற்றனர். 2004 ஆம் ஆண்டு
நடைபெற்ற பரீட்சையில் இக்பால் பர்ஹத் அஹமட் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை
சேர்த்தமை பராட்டுக்குரியதாகும்.
ஜனாப் MU.ஹாறுன் அதிபர் அவர்களின் நிரவாகத்தில் எமது பாடசாலை பெற்ற வெற்றிக்கும் பின்னால் ஒற்றுமையாகவும், சமவும் உழைத்த ஓர் ஆசிரியர் குழாம் செயற்பட்டனர் என்ற உண்மையைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் 2007 ல் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் ஆக்க கூடுதலான மாணவர்கள் 31 பேர் சித்தியடைத்து பாடசாலையின் புகழை மேலோங்கச் செய்தனர். இங்கு இவர்களுக்கு கற்பிந்த ஆசிரியர்கள் பாராட்டுக் குரியவர்கள்.
இதனைத் தொடர்ந்து கடமையைப் பொறுப்பேற்ற MSA, நயீம் சேர் அவர்களின் காமத்தில் பாடவிதான - இணைப்பாடவிதான செயற்பாடுகள், பௌதீக அபினிருந்தி, நிர்வாகம் என எல்லாத் துறைகளிலும் எழுச்சியைக் கண்டது எனலாம். சுருங்கக்கூறின், இவருடைய காலத்தை பாடசாலை வளர்ச்சியின் பொற்காலம் எனலாம். கல்வி அபிவிருத்தியை எடுத்துக் கொண்டால் 2015 ஆம் ஆண்டு H.அதனான பாத்திஹ் என்ற மாணவன் கணித ஒலிம்பியாட் போட்டியில் தேசிய மட்டம் வரை சென்று வந்தான். இதற்காக வேண்டி உழைத்த ஆசிரியை AA.சுரைபர் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் N.சிமாக் அஹமட் என்ற மாணவன் வலய மட்டத்தில் முதலாம இடத்தினைப் பெற்றான். 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் NG.அதீக் என்ற மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று எமது பாடசாலைக்கும் எமது வலயத்திற்கும் பெருமை சேர்த்தார். 2019 ஆம் ஆண்டு நடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் T.வொலீத் என்ற மாணவன் மாவட்டத்தில் 3 ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இக்காலகட்டங்களில் மாணவர்களுக்கு திறம்பட தரம் 5 வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர்களான ALA.ஜெலில், J முதழா, MI.சிறாஜ், II.அனஸ் ஆகியோரின் கடின உழைப்பு உள்ளது.
கல்லி அபிவிருத்தியில் அதிபர் MSA. நயீம் சேர் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்காக வேண்டி ஆசிரியர் வாண்மை விருத்திக்காக SBTO வளவாளர்களைக் கொண்டு பல்வேறு கருத்தரங்குகளை நடத்தினார். தரவட்ட செயன்முறைக்கு உயிர் கொடுத்தார். விஞ்ஞான கூடத்திற்கு தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுத்ததுடன், கணனி அறையை மேம்படுத்தும் முகமாக பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு, ஒரு அழகான கணனிக் கூடத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்.
இவரது காலத்தில் அதிபர் ஆசிரியர் உறவும், பெற்றோர் - பாடசாலை உறவும் மேம்பட்டுக் காணப்பட்டன. எவ்வேளையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கான வேலைத்திட்டங்கள் புற்றி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவார். அதன் பயனாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி அடைவு மேம்பாட்டுக்காக உழைத்தார். இவரது காலத்தில் நான் வழிகாட்டல் ஆலோசனைக்கென தனியான அறை ஒதுக்கப்பட்டு. அதற்கான வளங்களும் கொடுக்கப்பட்டன. கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தடையாக இருந்த அனைத்து விடயங்களையும் அப்புறப்படுத்தினார். குறிப்பாக இவரது காலத்தில்தான் வகுப்பறைகளுக்கு மின் விசிறிகள், மின் விளக்குகள் ஏன் வகுப்புகளுக்கு நீர் இணைப்புகள் கூட தேவைக்கு மேலதிகமாகவே பெற்றுக்கொடுக்கப்பட்
ஒழுக்கமுடனான கல்வி, திறன் வளர்ச்சிக்கு வேண்டி மாணவர்களின் காலைக் கூட்டத்தை திறம்பட வழிநடாத்த அயராது முன்னின்று பாடுபட்டார். மட்டுமல்ல விஷேட தினங்களின் போது பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு மாணவர்களுக்குத் தேவையான அறிவுனர்களை வழங்க வழிசமைத்தார்.
கிழக்கு மாகாணத்திலேயே முதன் முதலாக எல்லோரும் போற்றக்கூடிய வகையில் Smart Classroom என்ற எண்ணக்கருவிற்கமைய பல்வேறு வகுப்புக்களை ஒழுங்கமைத்து அழகுபடுத்தினார். இவ் வகுப்பறை அழகைப் பார்வையிட, கிழக்கு மாகாணத்திலிருந்து பல்வேறு பாடசாலைகள் வருகை தந்தன. அது மாத்திரமல்லாமல், அப்பாடசாலைகளும் தங்கள் பாடசாலைகளில் அவ்வாறான Smart வகுப்பறைகளை உருவாக்குவதற்கு அதிபர் MSA. நயீம் முன்னோடியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Zoom வகுப்புக்களை ஆசிரியர்கள் வீட்டில் செய்வது கடினமாக இருந்த காரணத்தால் பாடசாலையில் Zoom வகுப்பிற்கென Studio ஒன்றை அமைப்பதற்கு அயராது முன்னின்று உழைத்தார். அதன் பயனாக 52 அங்குல தொடுதிரையுடன் கூடிய Smart TV ஒன்றையும் பெற்றுக்கொடுத்தார். இவர் கல்விக்காக செய்த சேவையின் காரணமாக பல்வேறுபட்ட உயர்ந்த வெற்றிகளையும் பெற்றுக்கொண்டார்.
இணைப்பாடவிதான செயற்பாடுகளை நோக்கினால் இவரது காலத்தில் பல்வேறுபட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான வேலைத்திட்டங்கள் நடந்ததை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக பாடசாலையில் விளையாட்டு மைதானம் இல்லாத சந்தர்ப்பத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் இல்ல விளையாட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என கூறி, அதை கச்சிதமாக நடாத்தி முடித்து வெற்றியும் கண்டார். மாணவர்களின் கலைத்திறன்களை விருத்தி செய்வதற்காக வருடாந்தம் கலை நிகழ்ச்சிகளை நடத்துவார். ஆண்டு தோறும் மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு பூரண அனுமதி வழங்குவார். அவருடைய கால கட்டத்தில் தான் போட்டி நிகழ்ச்சிகளில் தேசிய மட்டத்தில் நிறையவே இடங்கள் கிடைக்கப்பெற்றன என்லாம்.
2016 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய சிறுவர் மெய்வல்லுனர் தரம் 4 பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைக்கப்பெற்றது. 2017 ஆம் ஆண்டு கண்டி போகம்புர விடையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டும் போட்டியின் போது தரம் 5 பிரிவில் வெள்ளி பதக்கம் கிடைக்கப்பெற்றது. 2019 ஆம் ஆண்டு கண்டி போகம்பர விடையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் போது. கிழக்கு மாகாணத்திற்கு முதல் தடவையாக தரம் 5 பிரிவில் தாங்கப் பழக்கத்தினைப் பெற்று. எமது பாசாலைக்கும் எமது வலயத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை கிடைப்பதற்கு தலைமை வகித்தார்.
மேலும் அவ்லாண்தேசிமீலா தின போட்டி நிகழ்ச்சியில் கனிஷ்ட பிரிவில் கிறாஆத் போட்டியில் E. அ அஹமட் எனும் மாணவன் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்தான் இவ் வெற்றிக்கு ஆசிரியை திருமதி SA.பாறூக் அவர்களின் பங்களிப்பு
அளப்பரியது. அதே தேசிய மீலாத் போட்டியின் போது கனிஷ்ட பிரிவில் களிகம்பு நிகழ்ச்சியில் எமது பாடசாலை தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது மாத்திரமல்ல. ஆரம்பப் பிரிவு கஸீதா நிகழ்ச்சியில் எமது பாடசாலைக்கு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடமும் கிடைக்கப் பெற்றது. மேலும் 2018 ஆம் ஆண்டு பிலிமத்தலாவையில் உள்ள ஹிராகம ஆசிரியர் அழகில்பயிற்சிக் கல்லூரியில் நடாத்தப்பட்ட தேசிய கலாசார நிகழ்வின் போது. திறந்த போட்டியான களிகம்பு நிகழ்ச்சியில் எமது பாடசாலை தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெறுவதற்கு வழியமைத்தார். இதற்காக வேண்டி அதிபர் அவர்களோடு பிரதி அதிபர் AL நபள், AL அய்துல் ஜெலீல், J. முர்தழா, ILஅனஸ், M.A. புர்கான், MA.சிஹான் ஆகியோரின் பங்களிப்பும் அளப்பரியது. இந் நிகழ்வுகள் யாவும் தேசிய ரீதியில் எமது பாடசாலையின் புகழை மேலோங்கச் செய்தது. இவை அனைத்திற்கும் இறை உதவியும் அதிபரின் வகிபாகமும் முக்கியமான காரணிகளாகும்.
இக் கலையகத்தில் கல்வி கற்றவர்களில் பலர் கலாநிதிகள், நீதிபதிகள், மருத்துவர்கள். பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், மார்க்க அறிஞர்கள், இராஜதந்திரிகள், எழுத்தாளர்கள். பிரபல வர்த்தகர்கள் என பல துறைகளிலும் பிராகசித்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இப் பாடசாலைக்கு பாடசாலை சமூகத்தினராலும், அரசியல் வாதிகளாலும், நல்மனம் படைத்த பரோபகாரிகளாலும் உதவிகள் அன்று தொட்டு இன்றுவரை கிடைத்த வண்ணமே உள்ளது. பாடசாலைக்கு உதவிய பாராளுமன்ற உறுப்பினர்களில் மர்ஹும் MA.அப்துல் மஜீட் (சம்மாந்துறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), மர்ஹூம் MI. உதுமாலெப்பை (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ALM. அதாவுல்லாஹ் முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப், முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் சேகு இஸ்ஸதீன் போன்றோர்என்றும் நினைவு கூர்த்தக்கவர்கள்.
இன்று 784 மாணவர்ளுடனும் 40 ஆசிரியர்களுடனும் கூட்டுப் பொறுப்புடன் இயங்கும் இப்பாடசாலைக்கு பலமான பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு ஒன்றும் உள்ளது. இவர்கள் இப் பாடசாலை விடயத்தில் என்றும் தன்னலம் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இச்சபைக்கு, சுறுசுறுப்பாக இயங்கும் இளைஞர் படையணியை கொண்ட பழைய மாணவர் சங்கம் ஒன்றும் பக்கபலமாக நின்று உதவிக் கொண்டிருக்கின்றது.
அன்று வெள்ளை உள்ளம் கொண்ட பெரிய மனிதர்களால் இடப்பட்ட ஆண்கள் வித்தியாயைம் என்ற வித்து, இன்று விசாவித்து விருட்சகமாகி எமது பிரசேத்திற்கு மட்டுமன்றி தேசியத்திற்கும் புகழ் பரப்பி பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல.






