உலகம் காக்கும் வல்லோனே உயர்ந்த அன்பின் அருளாளா உலகில் கருணை மழையாலே அணைப்பாய் எம்மை றகுமானே…ஃஃ
கல்விக் கருணை கண்திறந்து கனிவாய்க் கலைகள் பலதந்து பள்ளிப் படிப்பின் பயன் தந்து பகரும் பலசொல் வளம் தருவாய்..
உலகம் காக்கும் வல்லோனே உயர்ந்த அன்பின் அருளாளா உலகில் கருணை மழையாலே அணைப்பாய் எம்மை றகுமானே…ஃஃ
அள்ளித் தருவாய் அருளை எல்ல அதிபர் ஆசான் அனைவோர்க்கு துள்ளித் திரியும் எந்தனுக்கும் துணிவும் அறிவும் தந்தருள்வாய்…
உலகம் காக்கும் வல்லோனே உயர்ந்த அன்பின் அருளாளா உலகில் கருணை மழையாலே அணைப்பாய் எம்மை றகுமானே…ஃஃ
அனைத்துப் புகழும் உனக்காமே அழைத்துப் புகழ்வோம் உனை நிதமே. நினைத்துப் போற்றும் பாலர் எம் நிறைவாய் வாழ்த்தி அருள் பொழிவாய்…
உலகம் காக்கும் வல்லோனே உயர்ந்த அன்பின் அருளாளா உலகில் கருணை மழையாலே அணைப்பாய் எம்மை றகுமானே…ஃஃ
அக்கரைப் பற்றூரதனில் ஆண்கள் பாடசாலையதன் தக்க புகழும் நற்பெயரும் தவறா தென்றும் அருள்வாயே…..
உலகம் காக்கும் வல்லோனே உயர்ந்த அன்பின் அருளாளா உலகில் கருணை மழையாலே அணைப்பாய் எம்மை றகுமானே…ஃஃஃ